July 11, 2013

இந்திய சட்டம் பற்றி தெரியுமா?

நாம் செல்லும் வழியில் பணம் அல்லது பொருளை கண்டெ டுக்கிறோம். என்ன செய்வது ? அது சட்டப்படி குற்றமா?  இந்திய  சட்டப்படி இதை குற்றம் என நிரூபித்தால் தண்டனை உண்டா?

இது போன்ற பல கேள்விகள் நம் அனைவருக்கும் இருக்கும். நாம் அனைவரும் இந்திய  சட்டத் தை முழுவதும் படித்து தெரிந்து வைத்திருப்பது கடினம்.

இந்திய  சட்டம்  பற்றிய விரிவான  தகவல்களை நமக்கு எளிதாக புரியும் வண்ணம் கொடுக்கும்  தொலைக்காட்சி நிகழ்ச்சி சட்டம் சொல்வது என்ன ?

மக்கள்  தொலைக்காட்சியில் சனி மற்றும் திங்கள் இரவு 10:30 மணிக்கு காணலாம்.

மற்ற பயனுள்ள நிகழ்சிகள் இங்கே

January 13, 2013

பொங்கல் வாழ்த்து


 

பழைய இயலாமை போக்கி

இனிமையாக பிறக்கும்

தை திருநாள்

இயற்கையை வணங்கும்

நன்னாள்

இந்த நன்னாள் முதல்

இயற்கையை போற்றும்

புதிய நல்ல எண்ணங்கள்  தோன்றி

பிறரை மகிழ்விக்கும்

மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக மலர

வாழ்த்துக்கள்.